இந்தியாவை வந்தடைந்தன ரபேல் போர் விமானங்கள்

அம்பாலா: பிரான்சில் இருந்து புறப்பட்ட 5 போர் விமானங்கள் புதன்கிழமை இந்தியாவின் அம்பாலா விமான நிலையத்தை வந்தடைந்தன.

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016-இல்  ரூ.59 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. போர் தாக்குதலுக்கான இந்த ரக விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். 30 விமானங்கள் போருக்கு பயன்படுத்துவன ஆகும். இந்த விமானங்கள் பிற விமானங்களில் உள்ள அம்சங்கள் தவிர பிற சிறப்பு அம்சங்களும் அடங்கியுள்ளன.

இந்த 36 விமானங்களும் வரும் 2021 இறுதிக்குள் வழங்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்த விதி. இவற்றில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணி நிறைவடைந்து விட்டன. இவற்றை முறைப்படி பெற கடந்த ஆண்டு அக்டோபரில் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரான்ஸ் சென்றிருந்தார்.

இந்த 10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சில் உள்ளன. மீதமுள்ள 5 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன. இந்தியா-பிரான்ஸ் இடையேயான 7 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தை இந்த விமானங்கள் கடந்து இந்திய வான் எல்லைக்குள் புதன்கிழமை பிற்பகலில் நுழைந்தன. இந்த விமானங்களை சுகோய் எம் 30 ரக போர் விமானங்கள் அழைத்து வந்தன. அதைத் தொடர்ந்து அந்த விமானங்கள் ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கின.

ரபேல் போர் விமானங்கள் இந்திய ராணுவ வரலாற்றின் புதிய சகாப்தம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சிறப்பம்சங்கள் என்னென்ன: இந்த போர் விமானங்கள் முக்கிய ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. குறிப்பாக மெடடோர், ஸ்கால்ப் நாசகாரி ஏவுகணை சுமந்து செல்லக் கூடியவை. இந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், சுவீடன் போன்ற நாடுகள் பொதுவாக எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.