இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதல் நிதியுதவி
புதுதில்லி: இந்தியாவின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதலாக நிதியுதவி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,074-ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்ள மேற்கொள்ளும் தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்க அரசு கடந்த 6-ஆம் தேதி ரூ.21.75 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில், மேலும் ரூ.22.5 கோடி கூடுதலாக நிதியுதவியை அமெரிக்க அரசு அறிவித்ததை அடுத்து மொத்தம் ரூ.44.25 கோடி நிதியுதவி இந்தியாவுக்கு கிடைக்கும்.
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வலிமையான மற்றும் உறுதியான நட்புறவுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐஸ்டர் தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.