இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
புதுதில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதித்தோர் 6,088 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
கடந்த இரு நாள்களாக கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,088-ஆக பதிவாகியுள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,18,447- ஆக உள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 48,534-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3583- ஆக உள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில்
41,642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,967-ஆக உள்ளது. இவர்களில் 7,591 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,282 பேர் நோய்த் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 94 பேர் உயிரிழந்துள்ளனர்.
You must log in to post a comment.