இந்தியாவில் கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது


சென்னை: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை நோக்கி செல்கிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கே 40 ஆயிரத்து 263-ஆக இருந்தது.


கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து இருந்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை அளித்து ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.


இருப்பினும் பொதுமக்களின் ஒருதரப்பினர் பாதுகாப்பு உணர்வை கடைப்பிடிக்காமல் போவதால் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நிலை நீடிக்கிறது.
நாட்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போதைய சூழலில் 9,775 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் 3,897, தில்லி 2,802, மத்திய பிரதேசம் 1,892, ராஜஸ்தான் 1,586 என நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உள்ளது.


தமிழகத்தில் தற்போது 1,387 பேருக்கு நோய்த் தொற்று உள்ளது. இதுவரை கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,626, குணடைந்தவர் 1341 பேர், உயிரிழந்தவர்கள் 29 என்ற எண்ணிக்கையில் நாட்டில் 6-ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.