இட்லி சுடும் பாட்டியை விசாரித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: கோவையைச் சேர்ந்த
இட்லி சுட்டு விற்கும் மூதாட்டி கமலாத்தாளை விடியோ கால் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு பேசினார்.
கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி கமலாத்தாள் (85). இவர் தள்ளாத வயதிலும் உரல்களில் மாவு அறைத்து உணவு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இவர் விற்பனை செய்யும் இட்லி பஞ்சு போன்று இருப்பதோடு, சூடான சாம்பார், சுவையான சட்டி ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்றுத் தந்துள்ளது. அத்துடன் இவர் ஒரு ரூபாய் என்ற குறைந்த விலைக்கு இட்லி விற்பனை செய்கிறார்.
இவரை விடியோ கால் மூலம் தொடர்புகொண்ட மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

அதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா, குடும்ப சூழல் என்ன என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
ஒன்றிணைவோம் வா என்ற செயல்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சிலருடன் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் காணொலி காட்சி வாயிலாக தொடர்புகொண்டு பேசி வருகிறார்.
You must log in to post a comment.