ஆஸி. பிரதமருடன் நரேந்திர மோடி ஆலோசனை
புதுதில்லி: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் நடத்திய ஆலோசனையின்போது, ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:
ஒட்டு மொத்த உலகமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தை ஒரு வாய்ப்பாக மாற்ற இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உறவு ஆழமாகவும், அதேசமயம் விரிவடைந்தும் வருகிறது. இந்த நல்லுறவு உலகுக்கு நன்மை பயப்பதாகவும் உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த உச்சி மாநாடு சரியான நேரத்தில் நடைபெறுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியாவின் நட்ப்பை வலுப்படுத்த எல்லையில்லா வாய்ப்புகள் உள்ளன. இந்த உறவு பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஒரு காரணியாக அமைகிறது.
துடிப்பான ஜனநாயக நாடுகளாக, காமன்வெல்த் முதல் கிரிக்கெட் வரை, உணவு வகைகள் வரை நம் மக்களிடமுள்ள உறவு வலுவானது. கொரோனா பாதிப்பு சீரடைந்ததும் ஆஸ்திரேலிய பிரதமர் குடும்பத்தினருடன் இந்தியா வர வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

சீனாவை ஆஸ்திரேலியா கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பேசியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
You must log in to post a comment.