ஆள்மாறாட்டம் செய்தால் 3 ஆண்டு சிறை

IPC என்பது இந்திய தண்டனைச் சட்டமாகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டமாகும்..

Article 361(4) – குடியரசுத் தலைவர் தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடர முடியும்.


IPC-166 – அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர் பணியின் போது கடமையிலிருந்து தவறினால் ஓராண்டு சிறை.


IPC-217 – நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.


CRPC 404 – நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்ய முடியும்.


Article 19(1) , CRPC 303,302(2) – சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இன்றி தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.


இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-இன் கீழ் எவர் ஒருவரும் பார்வையிடலாம்.


CRPC 36, 149 – ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு.


.CRPC.160(2) – காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறமுடியும்.


Article 21(14) – அதீதமான சூழலில் மட்டுமே கைவிலங்கிட முடியும்.


Article 32(8) – புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.


IPC.267 – முத்திரை இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தால் ஓர் ஆண்டு தண்டனை உண்டு.


.IPC-403 – அடுத்தவரின் அசையும் சொத்தை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை உண்டு.


IPC-315 – குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் 10 ஆண்டு சிறை தண்டனை.


IPC-96 – தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை.


IPC-295 – பிற மதம் நிந்தித்தால் 2 ஆண்டு சிறை. மத உணர்வுகளை புண்படுத்தினால் ஓர் ஆண்டு சிறை.


IPC-419 – ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை.


IPC-468 – ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7 ஆண்டு சிறை.


IPC-484 – சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3 ஆண்டுகள் சிறை .


IPC-494 – மனைவி உயிருடன் இருக்கும்போது கணவர் மறுமணம் செய்தால் 7 ஆண்டுகள் சிறை.


.IPC-495 – முந்தைய திருமணம் மறைத்தால் 10 ஆண்டு சிறை.


IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.