ஆயுஷ்மான் பாரத் திட்டம்-ஒரு கோடி பேர் பயன்:மோடி

புதுதில்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2018 செப்டம்பரில் பிரதமர் மோடி ஆயுஷ் மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் தரமான சிகிச்சையை ஏழை மக்கள் இலவசமாக பெறமுடியும். நாட்டில் 10 கோடி ஏழை குடும்பங்கள் மருத்துவக் காப்பீடு பெறும் வகையிலும், ஒட்டுமொத்தமாக 50 கோடி மக்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
ஆயுஷ்மான் பாரத் திட்டம் பல பேருக்கு பயனளித்து வருகிறது. இதன் மூலம் இந்தியர்கள், குறிப்பாக ஏழைகளின் நம்பிக்கையை பெற முடிந்தது. பயனாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் மோடி.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.