ஆந்திர மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு

11 பேர் பலி – 1000 பேர் பாதிப்பு


விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்ஆர் வெங்கடபுரம் கிராமத்தில் உள்ள ரசாயணத் தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது.
இந்த விஷவாயு கசி சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு பரவிய நிலையில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்போர்ருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சாலைகளில் நடந்து சென்றவர்கள் விஷவாயுவால் மயங்கி விழுந்தனர்.
இந்த விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். சுமார் 1000 பேர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வியாழக்கிழமை மாலை வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது.
மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறும், மின்சாதனங்களை இயக்க வேண்டாம் எனவும் போலீஸாரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கூடுதல் தகவல்…

விஷவாயு கசிவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.