ஆகஸ்ட் 1-இல் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் திறப்பு: மத்திய அரசு

புதுதில்லி: நாட்டில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகஸ்ட் 1-இல் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


உலகை அச்சுறுத்தி வரும் கொரானா பரவலை அடுத்து நாட்டில் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17-ஆம் தேதி வரை நீடிக்கிறது.
இந்நிலையில், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்நிலையில், வரும் ஆகஸ்ட் முதல் தேதியில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
அதேபோல் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1-இல் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.