அவசரமாக வெளியூர் செல்ல இ-பாஸ்: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: திருமணம், இறுதிச் சடங்குகள், மருத்துவப் பரிசோதனை போன்றவற்றுக்காக வெளியூர் செல்வோர் இணையதளத்தில் விண்ணப்பம் செய்திருந்தால் உடனடியாக அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.


ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள சூழலில் தமிழகத்தில் வெளியூர் செல்ல விரும்பவோர் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து இ-பாஸ் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

அனுமதிச் சீட்டு வழங்கும் கட்டுப்பாட்டு அறை காலை 8 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுவதால் அவசரக் காலங்களில் விண்ணப்பித்து ஒரு நாள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இது தொடர்பான மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உடனடியாக அனுமதிச் சீட்டு வழங்க பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.