அறிவுசார் சொத்துரிமை நாள்

26.04.2020 ஞாயிற்றுக்கிழமை
🟢இன்று…

📌1986 ல்–  உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து, சோவியத் ஒன்றியம், உக்ரைனில் செர்னோபில் என்ற பகுதியில் ஏற்பட்டது.

📌1897 ல்– மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் பெ. சுந்தரம் பிள்ளை,  நினைவு தினம்.

📌1920ல் – இந்தியக் கணிதவியலாளர் சீனிவாச இராமானுசன், நினைவு தினம்.

📌அறிவுசார் சொத்துரிமை நாள்

📌1914 இல்– தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம், பிறந்தநாள்.

〰️〰️〰️🎞️🎹🎻〰️〰️〰

இன்றைய கவியரசர் கண்ணதாசன் பாடல்


🎶கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

கண்களின் வார்த்தைகள் புரியாதோ

தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா

ஏழை மனமே பொல்லாத மனிதர்
இவரை நம்பாதே இவரை நம்பாதே

தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும்
சிலையை மறந்தே ஓடினார்

உன்னை மறவாமலே வந்த துணை நானன்றோ

கண்களின் வார்த்தைகள் புரியாதோ

வண்ணக்கொடியே வண்டாடும் மலரே
எண்ணம் இருந்தும் நாணமா

பாவலர் தமிழின் பண்பான காதல்
மௌன கலையன்றோ

பெண்மை மனது நிலையன்றோ
பாடும் மனதின் பண்பான ஆசை
பார்வை வழியே தோன்றுமே

இனி வரும் நாளெல்லாம் நம் திருநாள் அன்றோ

கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

படம் : களத்தூர் கண்ணம்மா

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.