அரசு விழாக்கள்-செலவுகளை குறைக்க முடிவு


சென்னை: தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் செலவுகளை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி இல்லை. மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரெயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதிக்கப்படும். அரசு செலவில் வெளிநாடு பயணம், மாநிலத்திற்குள் விமானப் பயணத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
அரசு செலவில் மதிய மற்றும் இரவு விருந்துகளை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். விழாக்களில் சால்வை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்குவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு.
மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலகத் தேவைகளை வாங்குவதை 50 சதவீதம் குறைக்க வேண்டும். உபகரணங்களை கொள்முதல் செய்வதில் சுகாதாரம் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. விளம்பர செலவுகளை 25 சதவீதம் குறைக்க வேண்டும் என அரசுத் துறைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.