அரசு மதுபானக்கடைகள் 7-ஆம் தேதி முதல் செயல்படும்


தமிழக அரசு அறிவிப்பு


சென்னை:
தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி முதல் மதுபானக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மே 4 முதல் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆநதிரா போன்ற அண்டை மாநிலங்களில்

மதுபானக் கடைகலை திறக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடாக மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளுக்கு தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால் மாநிலங்களுக்கு இடையேயாந மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.


இதைக் கருத்தில்கொண்டு தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி முதல் மதுபானக் கடைகளைத் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.
மதுபானக் கடைகள் சில நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது.


மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு நபருக்கும், மற்றொரு நபருக்கும் 6 அடி இடைவெளி பராமரிக்க வேண்டும். மதுபானக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறந்திருக்கும். அனைத்து மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். எனினும் மதுபானக் கூடங்கள் திறக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.