அரசு அறிவித்த இழப்பீடுகள் போதாது: மு.க.ஸ்டாலின்


சென்னை:
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றி நடக்க வேண்டும். அதே நேரத்தில் அரசு மக்களுக்கு அறிவித்த இழப்பீடுகள் போதாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிகரித்துவரும் கொரோனா பேரழிவுக்கு முற்றுப்புல்ளி வைக்க அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றி நடக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களின் தேவைகளுக்கான உதவிகளை அரசுகள் செய்து தர வேண்டும். அரசு அறிவித்த இழப்பீடுகள் போதாது. ரூ.5 ஆயிரம் உதவித் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் என களத்தில் நிற்பவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவர்களுக்கு போதுமான பரிசோதனைக் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் இல்லை.
தனிமனித இடைவிலகல், கை கழுவுதல் இயலாத சூழலில் மக்கள் வாழும் பகுதிகளுக்கு சிறப்பு அலுவலர்களை நியமித்து உதவிகளை வழங்கி கவனம் செலுத்த வேண்டும்.


அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.