அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் கஜபதி தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரிந்த 54 வயது பெண் பணியாளருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கட்டுப்பாட்டில் இருந்து கொரோனா நோய்த் தொற்றின் வேகம் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதிக்கு வந்து சென்றவர்கள் மூலம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த மார்க்கெட்டுக்கு வந்து சென்ற ஏராளமான எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதி கஜபதி தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரியும் 54 வயது பெண்ணுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவருடன தொடர்புடைய மற்றவக்ளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.