அம்பன் புயல்-பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் இழப்பீடு-மம்தா அறிவிப்பு


கொல்கத்தா: அம்பன் புயலுக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
அம்பன் புயல் மேற்கு வங்கத்துக்கும், வங்கதேசத்துக்கும் இடையே அதிதீவிர புயலாக கடக்கவிருந்த நிலையில், மேற்கு வங்கத்திலும், ஒடிஸாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இரு மாநிலங்களின் கடலோர பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் வசிக்கும் சுமார் 6 லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
எனினும், அம்பன் புயலுக்கு 72 பேர் வரை பலியாகியுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். உயிரிழந்தோரில் 17 பேர் கொல்கத்தா நகரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும், மரங்கள் முறிந்து விழுந்தபோதும், வீடுகள் இடிந்து விழுந்தபோதும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2.5 லட்சம் தற்போது இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.