அம்பன் புயலால் வங்க தேசத்தில் பெரும் பாதிப்பு

மேற்கு வங்கத்தின் திகா-வங்க தேசத்தின் ஹதியா தீவுக்கு இடையே கரையைக் கடந்த அம்பன் புயல் அங்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.
சுமார் 6 மணி நேரம் பலத்த மழையுடன் சூறாவளி காற்று புதன்கிழமை வீசியது. புயலில் சிக்கியவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். புயல் தொடர்பாக தெரிவித்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, குறைந்தபட்சம் 12 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, தெற்கு வங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், ஹவுரா, கொல்கத்தா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், போன்ற மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன என்றார்.
இந்த பேரழிவில் சிக்கிய மக்களை அரசியலை மறந்து எங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சுமார் 5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான பாலங்கள், தடுப்பணைகள், ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்துள்ளன. மாநிலத்தின் பல பகுதிகள் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
சேதத்தை மதிப்பீடு செய்யவும், நிவாரண உதவிகள் வழங்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு சிறப்பு பணிக்குழுவின் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.