அமெரிக்கா நிதியுதவி தற்காலிக நிறுத்தம்: உலகச் சுகாதார நிறுவனம் கருத்து


ஜெனீவா: உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கும் நிதி முக்கியமான ஒன்று என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொவைட்-19 நோய்த்தொற்று தொடர்பான செய்தியாளர் கூட்டத்தை நடத்தியபோது, அவ்வமைப்புக்கான நிதி உதவியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைப்பின் பொது இயக்குநர் தெட்ரோஸ்பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியது:உலகச் சுகாதார அமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை அமெரிக்கா நம்ப வேண்டும். அமெரிக்கா வழங்கும் நிதி பிற நாடுகளுக்கு உதவியாக இருப்பதோடு, அமெரிக்காவின் சொந்த பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் என்றார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.