அமெரிக்காவை எச்சரித்தது ஈரான்!


தெஹ்ரான்: ஈரானின் ராணுவக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை அமெரிக்கா தந்தால், வளைகுடாவில் உள்ள அமெரிக்க போர்க் கப்பல்கள் அனைத்தும் நொறுக்கப்படும் என ஈரான் பகிரங்கமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த 15-ஆம் தேதி பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்துப்பணியில் இருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்களை ஈரானிய கடற்படைக்கு சொந்தமான 11 சிறிய ரக படகுகள் சுற்றி வளைத்தன.
இதையறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் நாட்டு படகுகளை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார். இது தொடர்பாக டுவிட்டரிலும் பதிவிட்டார்.
இதையடுத்து ஈரான் மேஜர் ஜெனரல் ஹுசைன் சலாமி விடுத்த எச்சரிக்கையில், அப்படி ஏதேனும் நடந்தால் வளைகுடாப் பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்க கப்பல்களும் நொறுக்கப்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் வலிமையை அமெரிக்கா அறியும், அதை முந்தைய சமயங்களில் நாங்கள் கொடுத்த பதிலடியில் பாடம் கற்றிருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.