அமெரிக்காவின் 40 கடற்படை கப்பல்களில் கொரோனா நோய்த் தொற்று


அமெரிக்கக் கடற்படையின் 40 போர்க் கப்பல்களில் கொரோனா நோய்த் தொற்று பரவியுள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது, அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த 26 போர்க் கப்பல்களில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் கப்பல்கள் அனைத்தும் கரையில் நின்றவையாகும். ஏற்கெனவே 14 போர்க் கப்பல்களில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குணமடைந்துள்ளனர் என்று அமெரிக்கக் கடற்படையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட புதிய புள்ளிவிவரப்படி, அமெரிக்காவின் பல்வேறு படைப் பிரிவுகளில் 3,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 1,298 பேர் கடற்படை வீரர்கள் எனத் தெரியவந்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.