அமித் ஷா மேற்கு வங்க அரசின் மீது குற்றம் சுமத்துவதா-திருணமுல் காங்கிரஸ் கேள்வி
புதுதில்லி: தனது கடமைகளில் இருந்து தவறிய அமித் ஷா மேற்கு வங்க அரசின் மீது குற்றம் சுமத்துவதா என்று திரிணமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதிக்கு பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து மட்டும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர போதுமான உதவிகளை மாநில அரசு செய்ய முன்வரவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு கருத்தை பதிவிட்டிருக்கிறார்.
அதில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், பல வாரங்கள் கழித்து இன்றுதான் உள்துறை அமைச்சர் பேசியிருக்கிறார். இத்தனை நாள்கள் மௌனமாக இருந்துவிட்டு தன் கடமைகளில் இருந்து தவறிய அமித் ஷா மேற்கு வங்க அரசின் மீது குற்றம் சுமத்துவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க அரசின் மீது வைத்திருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். அப்படியில்லையெனில் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
You must log in to post a comment.