அப்துல் கலாம் நினைவு நாள்
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்பதையே ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என அழைக்கிறோம். இந்தியாவின் 11-ஆவது குடியரசுத் தலைவராக இருந்த அவர் தமிழகத்தில், ராமேஸ்வரத்தில் பிறந்தவர். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தவர்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆகியவற்றில் பணியாற்றினார். ஏவுகணை, ஏவுகணை ஏவுதல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால் இந்திய ஏவுகணை நாயகனாக அவர் பிரபலமானார்.
1974-இல் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்குப் பிறகு 1998-இல் நடந்த போக்ரான்-II அணுஆயுத பரிசோதனையில் நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றியவர். இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக ஆதரவுடன் 2002-இல் கலாம் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வேந்தராகவும், சென்னை அண்ணா மற்றும் ஜேஎஸ்எஸ் மைசூர் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றினார். சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.
கலாம் தனது இந்தியா 2020 புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்களை முன்மொழிந்துள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். கலாம் ஊக்குவி்பு பேச்சுக்களால் இந்திய மாணவர் சமூகம் மிகுந்த நெருக்கத்தை அவருடன் ஏற்படுத்திக் கொண்டது.
அவர் மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவன மாணவர்களிடையே 2015 ஜூலை 27-இல் உரையாற்றுகையில் மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். ராமேஸ்வரத்தில் 30 ஜூலை 2015-அன்று முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிற நிகழ்வுகள்
1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றார்.
1549 – பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.
1627 – தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோ நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது.
1794 – பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரைத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.
1862 – சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பனாமா நோக்கிச் சென்ற “கோல்டன் கேட்” என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்.
1865 – வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.
1880 – இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் பிரித்தானியரை வென்றனர்.
1921 – பிரெட்ரிக் பாண்டிங் தலைமையில் டொரொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இன்சுலின் கண்டறியப்பட்டது.
1941 – ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.
1953 – கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
1955 – ஆஸ்திரியாவில் மே 9, 1945 முதல் நிலை கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.
1879 – தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த நாள் (இ. 1959)
1983 – வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
1990 – பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1990 – திரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாள்கள் வைத்திருந்தனர்.
1997 – அல்ஜீரியாவில் “சி செரூக்” என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2002 – உக்ரைனின் லுவிவ் நகரில் வான் கேளிக்கை நிகழ்ச்சியின் போது போர் விமானம் ஒன்று மக்களின் மீதூ வீழ்ந்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்.
2007 – பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதின.
2015 – இந்தியாவின் 11-ஆவது குடியரசுத் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் மறைந்த நாள்.
You must log in to post a comment.