அதிஉச்ச உயர்தீவிர புயலாக மாறியது அம்பன்

சென்னை: தெற்கு வங்கக்கடலில் அதிஉச்ச உயர் தீவிர புயலாக அம்பன் என பெயரிடப்பட்டுள்ள புயல் மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த அதிதீவிர புயல் வடதிசையில் நகர்ந்து திங்கள்கிழமை காலை 2.30 மணியளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் இப்புயல் மையம் கொண்டுள்ளதை அடுத்து 18-ஆம் தேதி மத்திய வங்கக் கடலின் தென் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வரையிலும் வீசக் கூடும். மேலும் தெற்கு ஒரிஸா மற்றும் அதனையொட்டியுள்ள கடல்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலும் இடையிடையே 65 கி.மீ. வரையிலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.