அதலைக்காய் என்னும் அதிசயம்!

முன்னோர்கள் நூறு ஆண்டுகளைக் கடந்தும் வாய்ந்தது இன்றைக்கு அதிசயம். இதற்கு நம்முடைய பாரம்பரிய உணவுமுறையை அவர்கள் முறையாக பின்பற்றியதுதான் காரணம்.

இப்போது 30 வயதை கடந்துவிட்டாலே சர்க்கரைநோயும், மாரடைப்பும், உயர் ரத்த அழுத்தமும் நம்மை ஆள்வதும் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றமே.

நம் நாவுக்கு அடிமையாகி புதிய உணவு முறைகளையும், வரம்பற்ற அசைவ உணவுகளையும் பின்பற்றுவதன் விளைவு மனித ஆயுள் மிகக் குறைந்து வருகிறது. இதை மருத்துவத் துறையும் அடிக்கடி எச்சரிக்கிறது.

இந்நிலையில், ஓரளவாவது நோய்களை 50 வயது வரையிலாவது தடுப்பதற்கு சில வகை தாவர உணவுகள் நமக்கு கைக்கொடுக்கின்றன. அதில் ஒன்று அதலைக்காய். இது ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதைச சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கிறது

அதலைக்காய் ஒரு அற்புத மருந்து என்பதை பலரும் அரிய வாய்ப்பில்லை. சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் இந்த காய் பாதுகாக்கிறது என்று சொன்னால் ஏதோ கற்பனை புனைந்து சொல்வதாக இந்த உலகம் பழிதூற்றும் என்பதும் உண்மை.

கொடி வகையைச் சேர்ந்த இந்தக் காய் நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது என பொதுவாக நாம் நம்பலாம். இந்த கொடி வகையை நாம் வளர்க்கத் தேவையில்லை. அது மழைக்காலம் தொடங்கி விட்டாலே சாலையோரங்கள், தோட்டங்களில் ஏற்கெனவே சிதறிக் கிடக்கும் விதைகள் உயர்பெற்று முளைக்கத் தொடங்கிவிடும். இதிலுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் என இதில் உள்ள சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


அதலைக்காய் பாகற்காயை போன்று சற்று கசப்பானது. அதை சாப்பிட்டவர்கள் எக்காலத்திலும் அதை சாப்பிடத் தவறுவதும் இல்லை.

இதன் சதைப்பகுதி இன்சுலின் போல செய்லபடக்கூடியது. இன்சுலின் என்பது நமது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மிகவும் அவசியம். மேலும் சர்க்கரையை குறைக்கும் பல சத்துக்களை கொண்டுள்ளது.

புற்றுநோய் செல்கள் இரத்தத்தில் வளர்வதற்கான ஆற்றலை இந்தக் காய் தடுக்கிறது. இது கணையத்தை பாதுகாப்பதால், இதனை தொடர்ந்து உண்பவர்களுக்கு கணைய புற்றுநோய் வர வாய்ப்புகள் மிகக்குறைவு என்கின்றனர் பாரம்பரிய மருத்துவர்கள். இதில் உள்ள லெய்ச்சின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு தடையாகிறது.

சிறுநீரக பாதிப்பு இந்த அதலைக்காயை சாப்பிடலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கறையத்தொடங்கும். இதில் உள்ள பைடோநியூட்ரின் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.

ஒரு கப் அதலைக்காயில் 16 கலோரிகள் மட்டுமே இருப்பதால் எடைக்குறைப்பில் ஆர்வம் காட்டுவோர் அடிக்கடி சாப்பிடலாம். இனி அதலைக்காயைக் கண்டால் தவறவிட்டுவிடாதீர்கள். அது உங்கள் ஆரோக்கியத்தை பேணும் அருமருந்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.