அஜித் பிறந்த நாளை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!


சென்னை: நடிகர் அஜித் பிறந்த நாள் இன்று. அவரது ரசிகர்கள் வழக்கம்போல் அவரது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில், விஜய் ரசிகர்கள் இன்று விஜய் ரசிகர்கள் #NanbarAjith என்ற ஹேஷ்டேகை தேசிய அளவில் டிரெண்ட் செய்துள்ளனர்.
பதிலுக்கு அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் இத்தகைய மாற்றம் ஆரோக்கியமான சூழலை இந்த மே தினத்தில் தந்துள்ளது.
முன்பெல்லாம் ரசிகர் மன்றங்களிடையே மோதல் நடப்பதுண்டு. சமூக மாற்றத்தாலும், விழிப்புணர்வாலும் இன்றைக்கு ஒரு நடிகரின் ரசிகர் மற்றொரு நடிகரின் ரசிகரை பாராட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. அது மே தினமாக இன்று விஜய் ரசிகர்கள் மூலம் அகில இந்திய அளவில் பரவியுள்ளது.
உழைப்பால் உயர்ந்த அஜித்
இன்றைக்கு 49-ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அஜித் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார். பின்னாளில் கார், மோட்டார் சைக்கிள் ரேஸ்களை மிகவும் விரும்புவதற்கு இதுவே காரணமாக அமைந்தது.
திரைப்படத் துறையில் ‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து ‘பிரேம புஸ்தகம்’ என்கிற தெலுங்குப் படத்தில் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
எதிர்பாராமல் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் இயக்குநர் உயிரிழக்க, அவரது தந்தையால் படம் எடுக்கப்பட்டது.
அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அவருக்கு அப்படத்தில் டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் நடிகர் விக்ரம்.
அதைத் தொடர்ந்து திரையுலகில் உச்சத்தை நோக்கி முன்னேறிய அஜித், தனது எளிமையான செயல்பாடுகள் மூலம் ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
‘அமர்களம்’ திரைப்படப்பிடிப்பின் போது ஷாலினி மீது காதல் ஏற்பட்டது. இருவரும் பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.
அஜித் எப்போதுமே குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புபவர். புகைப்படங்கள் எடுப்பது அவருக்கு பிடித்த விஷயம்.
நான் ஒரு நடிகன். நீங்கள் என் திரைப்படங்களை ரசித்தால் போதும். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். அதுதான் என் விருப்பம் என வெளிப்படையாகத் தெரிவித்து ரசிகர் மன்றங்களைத் தவிர்த்தார்.
பத்திரிகையாளர்கள் சந்தித்தால் மனதில் பட்டதை சட்டென கூறுவார். எக்காரணத்துக்காகவும் அந்த கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டார் என்பது அவரது சுபாவத்தை அறிந்தவர்கள் சொல்வதுண்டு.
ஒருபுறம் விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேக் செய்ய மற்றொரு புறம் #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்தை குவித்து வருகின்றனர். திரைத் துறையினர் பலரும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உழைப்பால் உயர்ந்தவரை நாமும் வாழ்த்துவதில் பெருமை கொள்வோம்.

டுவிட்டரில் டிரெண்டாகி வரும் ஒருசில விடியோக்கள்…

https://twitter.com/i/status/1256072495636951040
Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.